கரோனா காலத்தில் குடும்ப வன்முறை, பாலியல் ரீதியான தாக்குதல் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இதனிடையே, சத்தீஸ்கர் மாநிலம் பாலோத் மாவட்டத்தில், ஐந்து சிறுமிகளை 65 வயது முதியவர் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுமிகளைத் தொலைக்காட்சி பார்க்கலாம் என வீட்டுக்கு அழைத்து, இந்தக் கொடூரத்தை அவர் செய்துள்ளார். ஜூலை 28 முதல் 30ஆம் தேதி வரை, அர்ஜூனா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. பாலியல் தாக்குதலுக்கு உள்ளான சிறுமிகளில் ஒருவர் சோகமாக இருந்துள்ளார்.