தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மது அருந்த எதிர்ப்பு: முதியவர்களை அடித்துக் கொலை செய்த கும்பல்! - Crimes in jharkhand

ராஞ்சி: பொது இடத்தில் மது அருந்தியவர்களுக்கு தட்டிக்கேட்ட வயதான முதியவர்களை அடையாளம் தெரியாத கும்பல் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mob
Mob

By

Published : Nov 17, 2020, 2:57 AM IST

ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சிலர் பொது இடத்தில் மது அருந்தியுள்ளனர். அதற்கு வயதான தம்பதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மது அருந்திய நபர்கள் அந்த முதியவர்களைத் தாக்கினர்.

சம்பவ இடத்திலேயே தாக்குதலுக்கான முதியவர்கள் உயிரிழந்தனர். காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் சாய்னி கோப், பூலோ தேவி என்பது தெரியவந்தது. அடையாளம் தெரியாத கும்பலுக்கும் முதியவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது என காவல் கண்காணிப்பாளர் ஜனார்த்தனன் தெரிவித்துள்ளார்.

ஐந்து நபர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், குற்றவாளிகளைப் பிடிக்க தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டதாகவும் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details