மச்சான் காதலிக்கிறியா தைரியமா போய் சொல்லுடா என்பதை நண்பர்களுக்குள் சொல்லி கேட்டிருப்போம். இந்த தைரியப் பேச்சு இளைஞர்கள் மத்தியில் சாதாரணம்தான். ஆனால், நீண்ட வருடங்களாக காதலித்த 65 வயது மூதாட்டியிடம் தனது 70 வயதில் காதலை வெளிப்படுத்தி திருமணம் செய்த சம்பவம் சத்தீஸ்கரில் அரங்கேறியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் மெயின்பூர் பகுதியில் உள்ள ஜாதபதர் கிராமத்தை சேர்ந்த ராம் நேதம்(70), திருமணம் செய்யாமலே வாழ்ந்துவந்தார். இருப்பினும் தன்னை போலவே திருமணம் செய்துகொள்ளாமல் அக்கிராமத்தில் வசிக்கும் 65 வயதான தில்கா என்ற மூதாட்டியை நீண்ட நாள்களாக காதலித்து வந்துள்ளார். தன்னுடைய காதலை முதலில் வெளிப்படுத்த தெரிவிக்க தயங்கிய ராம், தைரியத்துடன் தனது அன்பை தில்காவிடம் வெளிக்காட்டியுள்ளார்.