துப்பாக்கிச் சூடு போட்டி: பதக்கம் வென்ற தமிழ்நாட்டு மங்கை! - wins Silver metal
இத்தாலியில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை இளவேனில் வளரிவன் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தமிழ்நாடு வீராங்கனை
இத்தாலியில் உலக பல்கலை விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் கலந்துக் கொண்ட தமிழ்நாடு வீராங்கனை இளவேனில் வளரிவன் வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர், தென்கொரியாவில் சாங்வாங் நகரில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஜூனியர் அணியில் இடம்பெற்று தங்கப்பதக்கம் வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது இளவேனில் வளரிவனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.