1989ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓபன் ஸ்கூலிங் அமைப்பு, தற்போது அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ’ஏக்லவ்யா’ எனும் திறந்தவெளி ஆன்லைன் வகுப்பு திட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இதில், பல வகையான பாடத்திடங்களை மாணவர்கள் தங்களது படிப்புக்கு ஏற்றபடி கற்றுக் கொள்ளலாம். இந்தத் திட்டமானது "எந்த நேரத்திலும் கற்றல், எங்கும் கற்றல்" என்ற நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டுள்ளது.
மாணவர்களுக்காக புதிதாக தொடங்கப்பட்ட ஏக்லவ்யா ஓபன் ஆன்லைன் வகுப்பு! - மாணவர்களுக்காக புதிதாக தொடங்கப்பட்ட ஏக்லவ்யா ஓபன் ஆன்லைன் வகுப்பு
டெல்லி : அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓபன் ஸ்கூலிங் புதிதாக ’ஏக்லவ்யா’ எனும் திறந்தவெளி ஆன்லைன் வகுப்பைத் தொடங்கியுள்ளனர்.
ek
இந்தத் திட்டம் தொலைதூரக் கல்வியை பின்பற்றுவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். அதே போல், லட்சக்கணக்கான கல்வி ரீதியான தகவல்களை எளிதில் கற்றுக்கொள்ளவும் சிறந்த தளமாக இது அமைந்திடும். இதன் மூலம் மாணவர்கள் தங்களது திறமைகளை பல்வேறு பிரிவுகளில் முன்னேற்றிக் கொள்ளலாம்.
இந்தத் திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு http://mooc.nios.ac.in/mooc/எனும் லிங்கை தொடர்பு கொள்ளலாம்.