கர்நாடகா மாநிலம், மாண்டியா அருகேயுள்ள பெல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சீனிவாஸ், மரங்கையா. இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 18) வழக்கம் போல் இரு குடும்பத்தினருக்கும் சொத்து தகராறு ஏற்பட்டது. அதில், மனமுடைந்த ஒரு குடும்பத்தினர் விஷம் அருந்தியுள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மற்றொரு குடும்பத்தினரும் விஷம் அருந்தினர்.
சொத்து தகராறு காரணமாக விஷம் குடித்து 8 பேர் தற்கொலை முயற்சி! - மாண்டியா
கர்நாடகா: மாண்டியாவில் சொத்து தகராறு தொடர்பாக இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த எட்டு பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![சொத்து தகராறு காரணமாக விஷம் குடித்து 8 பேர் தற்கொலை முயற்சி! eight members of two families consume poison in mandya over property dispute onedies](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-04:59:14:1597836554-kn-mnd-04-galate-av-01-7202530-18082020222602-1808f-1597769762-331-1908newsroom-1597815032-484.jpg)
eight members of two families consume poison in mandya over property dispute onedies
பின்னர் அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மத்தூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில், பிரேமா, நாராயண், திம்மம்மா, உத்தரப்பா, கரியப்பா, சித்தேஷ் ஜெயம்மா ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஆனால், ஷைலா என்பவர் மடடும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த எட்டு பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.