மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையின்மீது பொது மக்கள் தங்கள் கருத்துகளை வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவை கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "நாட்டை கொள்ளையடிப்பதுதான் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவின் தெளிவான நோக்கம்.
நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கும் மோடியின் சூட் பூட் நண்பர்களுக்காக மட்டுமே பாஜக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணம் இது. சுற்றுச்சூழல் அழிவு, வளங்கள் திருட்டு ஆகியவற்றைத் தடுக்க சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு திரும்பப் பெறப்பட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.