மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கவுள்ளது. நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு இதுவரை ஆறு முறை நடந்துள்ளது. இந்த முறை, சாதி வாரியான விவரங்களை சேகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஒரு நாட்டின் மனித வளங்களின் செயல்திறனின் மூலம் கிடைக்கும் அதன் பொருளாதார வளங்கள் 'மக்கள்தொகையின் பங்களிப்பு' என்று கருதப்படுகிறது சமீபத்திய ஆண்டுகளில், தேசிய மற்றும் மாநில அளவிலான கட்சிகள் நலத்திட்டங்கள் தொடர்பான வாக்குறுதிகளை பரவலாக அளிக்கின்றன. அந்த திட்டங்களை செயல்படுத்த மக்கள் தொகை விவரங்கள் அவசியமாகிறது. இடஒதுக்கீட்டை உருவாக்குவதிலும் அவை முக்கிய பங்கு வகிக்கிறது. சமூக மாற்றத்தை அடைய தரமான கல்வி இன்றியமையாதது. இதன் மூலம், திறமையான மனித வளங்கள் கிடைக்கும்.
அதே சமயத்தில் எதிர்மறையான முடிவுகளாக இருந்தால் மக்கள் தொகை நாட்டிற்கு சாபம் ஆகிவிடும். ஐக்கிய நாடுகள் சபையின் உலக மக்கள்தொகை அறிக்கை (2019)இன்படி, இந்தியாவின் மக்கள் தொகை 2027க்குள் சீனாவை மிஞ்சி உலகில் முதலிடத்தைப் பிடிக்கும்.
மக்கள் தொகையை கட்டுப்படுத்த இந்தியா 50 ஆண்டுகளாக குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நடவடிக்கைகள் மக்கள் தொகை பெருக்கத்திற்கு காரணமான சமூக மற்றும் பொருளாதார அம்சங்களை அடையாளம் காணத் தவறிவிட்டன. மக்கள்தொகை வளர்ச்சியால் ஏற்படும் சவால்களை புதிய கண்ணோட்டத்தில் பகுப்பாய்வு செய்ய வேண்டும்.
மக்கள்தொகை பெருகினால், மக்களின் தனிநபர் வருமானம் குறைந்து நாடு ஏழ்மையாக மாறும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. 21ஆம் நூற்றாண்டில் மக்களின் மனப்பான்மையும் தேவைகளும் மாறிவிட்டன. ஒரு காலத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எதிர்கால வருமான ஆதாரமாகவும், வயதான காலத்தில் ஒரு ஆதரவாகவும் பார்த்தார்கள். எனவே, அவர்கள் அதிகமான குழந்தைகளை பெறுவதில் ஆர்வம் காட்டினர்.
தற்போது மேம்பட்ட மருத்துவ வசதிகள் காரணமாக இறப்பு விகிதம் குறைந்துள்ளது. மக்களின் கல்வியறிவின்மை மற்றும் பழைய மரபுகள் அதிக மக்கள்தொகைக்கு வழிவகுத்தன. வெவ்வேறு இனங்கள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்களும் மக்கள் தொகை வளர்ச்சிக்கு காரணமாயின.
ஆசியாவில் மிகக் குறைந்த மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை இந்தியா பதிவு செய்து வருகிறது. மக்கள்தொகை வளர்ச்சி 1951-71 காலகட்டத்தில் 2.1 விழுக்காடாகவும், 1971-91 காலகட்டத்தில் 2.2 விழுக்காடாகவும் இருந்தது. 1991-2011க்கு இடைப்பட்ட காலத்தில் இது 1.8% ஆகவும், 2011-2016க்கு இடையில் 1.3% ஆக மேலும் குறைந்தது.
பொருளாதார கணக்கெடுப்பு (2019)ன்படி , 2011-12ஆம் ஆண்டில் சராசரி ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி 1.1 விழுக்காடாக இருந்தது. இது 2021-2031 ஆம் ஆண்டில் 0.7 விழுக்காடாகவும், 2031-2041 ஆண்டில் 0.5 விழுக்காடாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பாலின விகிதத்தைப் பொறுத்தவரை ஆண்களை விட பெண்கள் குறைவாக உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. நம் நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. அடுத்த பத்தாண்டுகளில், 20-59 வயதிற்குட்பட்ட தொழிலாளர்கள் மக்கள்தொகையில் பெரும்பங்கு வகிப்பார்கள்.
2041க்குள், சராசரி வயது 59 வயதாக இருக்கும். மாதிரி பதிவு முறை தரவின்படி, பீகார், உத்தரபிரதேசம், ஹரியானா, மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் மக்கள் தொகையை குறைக்கவும், மக்கள் தொகையை நிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாழ்க்கைத் தரம், மக்கள்தொகையின் பங்களிப்பு, நகர்ப்புற மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் வருமான சமமின்மை ஆகியவை நாட்டின் எதிர்கால சவால்களாக இருக்கும்.