ஹைதராபாத்தை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காபி, டீ குடிக்கும் கோப்பைகளை (Cup) இயற்கை முறையில் உருவாக்கியுள்ளனர். பிளாஸ்டிக், பேப்பர் உள்ளிட்டவையில் தயார் செய்யாமல் இயற்கை தானிய முறையில் தயாரித்துள்ளனர்.
#Eat_cup - டீ, காபி குடிக்கும் கப்பை இனி சாப்பிடலாம்! - ஹைதராபாத் ஆராய்ச்சி நிறுவனம் 'ஈட் கப்' தயாரிப்பு
ஹைதராபாத்: சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று காபி, டீ குடிக்கும் கோப்பைகளை (Cup) குப்பைகளில் போடாமல் அதனை சாப்பிடும் வகையில் உருவாக்கியுள்ளனர்.
இதுகுறித்து ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுரேஷ் ராஜு கூறியதாவது, "இந்தக் கப்பில் சூடானது முதல் மிதமான பானங்கள் வரை குடிக்கலாம். குடித்துவிட்டு தூக்கி போடாமல் அந்த கப்பினை சாப்பிடும் வகையில் உருவாக்கியுள்ளோம். ஐஸ்-கிரீம் கோன் போல இந்த கப்பில் ஊற்றிய பானங்களை குடித்துவிட்டு சாப்பிடலாம். உடலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. முழுவதும் இயற்கை முறையில் தயார் செய்யப்பட்டது. இதற்கு ஈட் கப் (Eat Cup) என்று பெயரிடப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: #THALA60PoojaDay - 4 மணிக்குத் தொடங்குகிறது அஜித் பட பூஜை!