பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நீரவ் மோடி வெளிநாடு தப்பிச் சென்றார். லண்டலின் பதுங்கியிருந்த நீரவ் மோடி, மார்ச் 20ஆம் தேதி அங்குள்ள வங்கியில் புதிய கணக்கு தொடங்கும்போது ஸ்கார்ட்லேன்ட் யார்டு காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.
பிணை கோரும் நீரவ் மோடி! லண்டன் செல்லும் அமலாக்கத் துறை - Nirav Modi's bail hearing
டெல்லி: பிணை கோரி நீரவ் மோடி தாக்கல் செய்த மனு மீதான விசாரணைக்கு அமலாக்கத் துறை குழு லண்டன் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிரவ் மோடி
இந்த வழக்கில் தனக்கு பிணை வழங்கக்கோரி நீரவ் மோடி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் பிணை கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணைக்கு அமலாக்கத் துறை தனது குழு ஒன்றை லண்டன் அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.