தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹத்ராஸ் சம்பவம்: உபா சட்டத்தில் நால்வர் கைது - உபா சட்டம்

லக்னோ: ஹத்ராஸ் சம்பவம் குறித்து தவறான தகவல்களை பரப்ப முயன்றதாக 4 பேரை உபா சட்டத்தின் கீழ் உ.பி. காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Upa act
Upa act

By

Published : Oct 12, 2020, 6:20 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் இளம் பெண் ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அப்பெண்ணின் உடலையும் பெற்றோர்களுக்கு அளிக்காமல் உ.பி. காவல்துறையினர் நள்ளிரவில் எரியூட்டினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் ஹத்ராஸ் சம்பவம் குறித்து தவறான தகவல்களை பரப்ப முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 4 பேரை உத்தரப் பிரதேச காவலர்கள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நால்வர் மீதும் உபா சட்டம் பதியப்பட்டுள்ளது. ஹத்ராஸ் சம்பவம் குறித்து தவறான தகவல்களை பரப்ப இவர்கள் வெளிநாட்டு அமைப்புகளிடமிருந்து பணம் பெற்றதற்கான ஆதாரங்களை அமலாக்கத் துறையினர் சேகரித்துள்ளனர்.

நால்வரும் தற்போது மதுராவில் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள 4 பேர் கொண்ட அமலாக்கத் துறையினர் லக்னோவில் இருந்து மதுரா விரைந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரும் முசாபர்நகரைச் சேர்ந்த அதிக்-உர் ரஹ்மான், மலப்புரத்தைச் சேர்ந்த சித்திக், பஹ்ரைச்சைச் சேர்ந்த மசூத் அகமது, ராம்பூரைச் சேர்ந்த ஆலம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும், அவர்களிடமிருந்து லேப்டாப், ஸ்மார்ட்போன் உள்ளிட்டவற்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details