பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ரா ஜ்புத் (வயது 34), கடந்த ஜூன் 14ஆம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். மன அழுத்தத்தின் காரணமாக சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சுஷாந்தின் மரணம் இந்திய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து வழக்குப் பதிவு செய்த பாட்னா காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங், ரியா சக்கரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
இதனிடையே, பாட்னா காவல் துறையினர் பதிந்துள்ள வழக்கை, மும்பைக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ரியா வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, பிகார் முதலமைச்சர் நிதீஷ் அகர்வால் இவ்வழக்கின் விசாரணையை சிபிஐக்கு பரிந்துரைத்தார்.