மும்பை:சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில் சிவசேனா எம்.எல்.ஏ., பிரதாப் சர்நாயக் வீடு மற்றும் அவர் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை நடத்திவருகின்றனர்.
இது குறித்து வெளியான தகவலின்படி, எம்.எல்.ஏ.,வுக்கு சொந்தமான 10 இடங்களில் சோதனை நடக்கிறது. இந்த சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் மேலும் சில முக்கிய புள்ளிகள் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.