இந்தியாவின் வான்வழிப் போக்குவரத்தில் முக்கிய பங்காற்றிடும் விமான சேவை நிறுவனங்களில் ஒன்று, ஜெட் ஏர்வேஸ். இந்த நிறுவனத்தை சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியவர் நரேஷ் கோயல்.
ஆனால், நிர்வாக ரீதியாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியதையடுத்து, அந்த நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து, கடந்தாண்டு மார்ச் மாதம் நரேஷ் கோயல் விலகியிருந்தார்.