ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு 2007ஆம் ஆண்டு ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி கிடைத்தது. இந்தப் பணம் விதியை மீறி பெறப்பட்டதாக அப்போதைய நிதியமைச்சர் ப. சிதம்பரம் உள்பட சிலர் மீது குற்றஞ்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கில் சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத் துறை, மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த நிலையில் கார்த்தி சிதம்பரத்திடம் இன்று (ஜன20) அமலாக்கத் துறையினர் மற்றும் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ப. சிதம்பரம் சென்ற மாதம் நீதிமன்ற பிணையில் வெளியே வந்தார்.
இந்நிலையில் தற்போது அவரது மகனிடம் அமலாக்கத் துறை மற்றும் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாட்டின் பொருளாதாரம்தான் கவலையளிக்கிறது - ப.சிதம்பரத்தின் அசால்ட் பதில்!