தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஏர் இந்தியா விமான ஊழல் வழக்கு: ப.சிதம்பரத்திடம் விசாரணை - ED questions P Chidambaram in UPA-era aviation scam case

டெல்லி: ஏர் இந்தியா விமான ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம், அமலாக்கத்துறை இயக்குநரகம் 6 மணி நேரம் விசாரணை நடத்தியது.

P Chidambaram
P Chidambaram

By

Published : Jan 4, 2020, 2:21 PM IST

2006ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தபோது, ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 110 விமானங்கள் கொள்முதல் செய்ய ரூ. 70 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில், ஆயிரத்து 225 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை இயக்குநரகம் வழக்குப் பதிவு செய்தது. மேலும், அப்போது மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த ப.சிதம்பரத்துக்கு 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அந்த நேரத்தில் ஐஎன்எக்ஸ் மீடிய வழக்கு தொடர்பாக அவர் சிபிஐ காவலில் இருந்ததால், விசாரணைக்கு ஆஜராகவில்லை. முன்னதாக, காங்கிரஸ் ஆட்சியில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த பிரஃபுல் பட்டேலிடம் அமலாக்கத்துறை அலுவலர்கள் குறுக்கு விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

P Chidambaram

இந்நிலையில், 100 நாள் சிறைவாசத்துக்கு பின் டிசம்பர் மாதம் பிணையில் வந்த ப.சிதம்பரத்திடம், ஏர் இந்தியா விமான ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலர்கள் டெல்லியில் நேற்று 6 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். ஏர் இந்தியா விமானம் கொள்முதல் செய்தபோது, மத்திய அமைச்சர்கள் குழுவுக்கு ப.சிதம்பரம் தலைமை வகித்ததால், இந்த வழக்கில் அவருக்கு தொடர்பு இருக்கும் என்று சந்தேகப்படுவதாக அமலாக்கத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details