கடந்த பிப்ரவரி மாதம் செனகலில் பெங்களூரு காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட கேங்ஸ்டர் ரவி பூஜாரி, விசாரணைக்காக பெங்களூரில் உள்ள மடிவாலாவின் எஃப்.எஸ்.எல் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர், அவரை பெங்களூரு காவல்துறையினர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு அனுப்பியுள்ளனர். விசாரணையில், கிரிக்கெட் பெட்டிங் மற்றும் பிரபலங்களை மிரட்டி பணம் பறித்து வந்த செயலில் ரவி ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
93 கிரிமினல் வழக்குகளின் குற்றவாளி கேங்ஸ்டர் ரவியிடம் அமலாக்கத் துறை விசாரணை! - Gangster Ravi Pujari arrested
பெங்களூரு: ஹவாலா பணப்பரிமாற்றம் வழக்கில் தொடர்புடைய பல வழக்குகளின் முக்கிய குற்றவாளி கேங்ஸ்டர் ரவியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.
avi
சுமார் 93 கிரிமினல் வழக்குகள் ரவி மீது பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஹவாலா பணப்பரிமாற்ற குற்றத்திலும் ரவிக்கு தொடர்பு இருப்பது குலாம் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்ததாக சிபிஐ தரப்பில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அதன்படி, ஹவாலா பணப்பரிமாற்றம் குறித்து ரவியிடம் விசாரிக்க அமலாக்க துறையினர் முடிவு செய்துள்ளனர்