பெங்களூர்:சட்டவிரோத பண பரிவர்த்தனை, போதைப் பொருள் வழக்கில், தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில், நான்காவது குற்றவாளியாக பினிஷ் கோடியேரி பதிவு செய்யப்பட்டுள்ளார்.
பினிஷ் கோடியேரி மற்றொரு குற்றவாளியான அனுப்புடன் சட்டவிரோத பண பரிவர்த்தனையில், ஈடுபட்டுள்ளார். அனுப்பின் போதைப் பொருள் வணிகத்துக்கு கருப்புப் பணத்தை கோடியேரி பயன்படுத்தியுள்ளார். மேலும், அனுப் பெயரை சட்டவிரோதமாக பயன்படுத்தி பெங்களூரு, கேரளாவில் விடுதிகளை திறந்துள்ளார் என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.