ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவன முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சிபிஐ அதிரடியாக கைது செய்தது. பின்னர், அவரை 15 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரணை செய்து செப்டம்பர் 5ஆம் தேதி நீதிமன்றத்தில் சிபிஐ ஆஜர்படுத்தியது. அப்போது சிபிஐ தரப்பில் மேலும் சில நாட்கள் விசாரணை செய்ய மனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, நீதிமன்றம் செப்டம்பர் 19ஆம் தேதி வரை காவலில் வைக்க அனுமதி அளித்தது.
சிதம்பரத்துக்கு காவல் நீட்டிப்பு! - Chidambaram Arrest
டெல்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்துக்கு அக்டோபர் 24ஆம் தேதி வரை காவல் நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்பின்னர் ப. சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டார். இதே வழக்கில் ப.சிதம்பரத்தை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி அமலாக்கத்துறை சார்பில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. ப. சிதம்பரத்திடம் 30 நிமிடங்கள் விசாரணை நடத்தலாம். தேவைப்பட்டால் கைது செய்யலாம் என்று அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்நிலையில், சிதம்பரத்தின் காவலை நீட்டிக்க அமலாக்கத்துறையினர், டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்றுமுறையிட்டனர். அவரின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 24ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.