பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிதி மோசடி செய்து நீரவ் மோடியும் அவரது உறவினர் மெஹூல் சொக்சியும் வெளிநாட்டிற்கு தப்பியோடிவிட்டனர். தலைமறைவு நிதிமோசடியாளர் தடுப்புச் சட்டத்தின் கீழ், மோடியின் சொத்துகளை பறிமுதல் செய்ய அமலாக்கத் துறைக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
மோடிக்கு சொந்தமான ரூ. 1350 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்! - நீரவ் மோடி நகைகள் பறிமுதல்
டெல்லி: சீனாவின் ஹாங்காங் நகரிலிருந்து நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹூல் சொக்சிக்குச் சொந்தமான 1350 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகள் அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

nirav modi
இந்நிலையில், ஹாங்காங் நகரில் அவர் பதுக்கி வைத்திருந்த 2300 கிலோ தங்க, வைர நகைகள் அமலாக்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டே இந்த நகைகளை துபாய்க்கு கடத்த நீரவ் மோடி முயற்சித்ததாக தங்களக்கு தகவல் வந்ததாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக கண்காணித்து தற்போது 1350 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை அமலாக்கத் துறை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.