தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க ஊழல்; ஃபரூக் அப்துல்லா சொத்துகள் முடக்கம்! - money laundering case

ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பாக ஃபரூக் அப்துல்லா -வின் ரூ.11.86 கோடி சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர். இதன் சந்தை மதிப்பு ரூ.70 கோடி ஆகும்.

ED attached RS11.86 cr assets of Farooq Abdullah ED latest reaction on Abdullaha JKCA money laundering case Abdullaha ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க ஊழல் ஃபரூக் அப்துல்லா நிதி முறைகேடுகள் ஊழல் அமலாக்கத்துறை JKCA money laundering case ED
ED attached RS11.86 cr assets of Farooq Abdullah ED latest reaction on Abdullaha JKCA money laundering case Abdullaha ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க ஊழல் ஃபரூக் அப்துல்லா நிதி முறைகேடுகள் ஊழல் அமலாக்கத்துறை JKCA money laundering case ED

By

Published : Dec 19, 2020, 7:25 PM IST

டெல்லி: ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பண மோசடி விசாரணை தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா உள்ளிட்டோரின் ரூ.11.86 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை (ED) முடக்கியுள்ளது என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

அதில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தற்காலிக இணைப்பு உத்தரவை அமலாக்கத்துறை பிறப்பித்துள்ளது என்றும் இணைக்கப்பட்ட சொத்துக்கள் ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி, இரண்டு அசையா சொத்துக்கள் குடியிருப்பு ஒன்றும், வணிக சொத்தும் ஒன்றும் அமலாக்க இயக்குநரகத்தால் இணைக்கப்பட்டுள்ளன. இதுதவிர மூன்று நிலங்களும் அதில் உள்ளன.

அமலாக்கத்துறையால் இணைக்கப்பட்ட இந்தச் சொத்துக்களின் மதிப்பு ரூ.11.86 கோடி என்றாலும், அவற்றின் சந்தை மதிப்பு சுமார் ரூ.60-70 கோடி ஆகும்.

இந்த வழக்கு தொடர்பாக ஃபரூக் அப்துல்லா (83) ஸ்ரீநகரில் அமலாக்கத்துறையினரால் கடைசியாக அக்டோபரில் அமலாக்கத்துறையினரால் விசாரிக்கப்பட்டார்என்பது நினைவுக் கூரத்தக்கது.

இதையும் படிங்க: “ராம ராஜ்ஜியம் அல்ல, நாதுராம் ராஜ்ஜியம்” - யோகி அரசு குறித்து அகிலேஷ்

ABOUT THE AUTHOR

...view details