தமிழ்நாட்டில் கடந்த 2013ஆம் ஆண்டு குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதற்கு தடை செய்யப்பட நிலையில், சட்டத்திற்குப் புறம்பான வகையில் குட்கா பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு இந்த விவகாரம் பெரும் பூதாகரமாக வெடிக்கவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி சிபிஐ அமைப்பானது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
சிபிஐ மேற்கொண்ட விசாரணையில் தொழிலதிபர்கள் மாதவராவ், சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட பலர் சட்ட விரோதமாக குட்கா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் குட்கா தடை செய்யப்பட்ட மாநிலங்களான தமிழ்நாடு, புதுச்சேரியில் அதை விற்றதன் மூலம் சுமார் 639.40 அளவில் வியாபாரம் மேற்கொண்டுள்ளதும் விசாரணையில் உறுதியானது.