தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜிடிபி 1.1% ஆக சரிய வாய்ப்பு - எஸ்பிஐ வங்கி தகவல் - கரோனா ஊரடங்கு எஸ்பிஐ ஜிடிபி

மும்பை : கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் நடப்பு நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) விகிதம் 1.1 சதவீதமாகச் சரிய வாய்ப்புள்ளதாக எஸ்பிஐ வங்கி தகவல் தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ ஜிடிபி, SBI GDP
sbI

By

Published : Apr 16, 2020, 10:57 PM IST

கரோனா வைரஸ் பரவலைத் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான நிறுவனங்கள் செயல்பட முடியால் திணறி வருகின்றன.

இந்தச் சூழலில், கரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதாரத் தாக்கத்தால் நடப்பு (2019-2020) நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் (ஜிடிபி) 1.1 சதவீதமாகச் சரியும் என எஸ்பிஐ வங்கி தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள எஸ்பிஐ வங்கி, "ஊரடங்கு நீட்டிப்பு நடவடிக்கையால் நாடு, 12.1 லட்சம் கோடி அளவிற்கு இழப்பைச் சந்திக்க உள்ளது.

இதன் காரணமாகச் சமன்செய்யப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி (Nominal GDP) வளர்ச்சி விகிதம் ஏறக்குறைய 4.2 சதவீதமாக வீழ்ச்சி காணும். அதுபோல், அரசாங்கம் வழங்கும் மானியங்கள் வரி வசூலை விஞ்ச வாய்ப்புள்ளதால் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதம் 1.1ஆக சரிய வாய்ப்புள்ளது.

மேலும் 1.32 லட்சம் கோடி அளவிற்கு மாநிலங்கள் வருவாய் இழக்கக்கூடும். நாட்டின் நிதிப் பற்றாக்குறை விகிதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.7 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களைப் பொருத்தவரை நிதிப் பற்றாக்குறை 3.5 சதவீதமாக உயரும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :10ஆம் வகுப்பு பாடங்கள் பொதிகை டிவியில் ஒளிபரப்பு...!

ABOUT THE AUTHOR

...view details