தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பொருளாதாரமும் குழந்தைத் தொழிலார்களும் ஒரே நேரத்தில் வளரக் கூடாது- கைலாஷ் சத்யார்த்தி - குழந்தைகள் உரிமை ஆர்வலர்

டெல்லி: வணிகம், தொழில் நிறுவனங்கள் குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்துவதை நிறுத்த வேண்டும் என்று குழந்தைகள் உரிமை நல ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி தெரிவித்துள்ளார்.

kailash satyarthi
kailash satyarthi

By

Published : Jun 13, 2020, 8:34 PM IST

குழந்தைகள் உரிமை நல ஆர்வலரும் நோபல் பரிசு வென்றவருமான கைலாஷ் சத்யார்த்தி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது, "குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினமான இன்று (ஜூலை-12), அனைத்து வணிகம், தொழில் நிறுவனங்கள், சிறுவர்களை பணி அமர்த்துவதை நிறுத்திவிட்டு சமூக பொறுப்புடன் செயல்பட வேண்டும். மேலும் உலக தொழில் முனையும் தலைவர்கள் தாமாத முன்வந்து குழந்தைகள் தொழிலாளர்களாக ஆவதைக் தடுக்க உதவ வேண்டும். #EndChidLabour2025 இந்தியாவை மேலும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான நாடாக அமைக்க வேண்டும்" என்று கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

அவரின் மற்றொரு ட்வீட்டில், "நாட்டின் பொருளாதாரமும் குழந்தைத் தொழிலார்களும் ஒரே நேரத்தில் வளரக் கூடாது. குழந்தைத் தொழிலாளர்களை ஒழிப்பதின் வாயிலாக நாட்டின் பொருளாதாரம் மேம்படுத்தப்பட்டு அதன் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகரித்து நாட்டில் முதலீடுகளை செய்ய அது வெளிநாடுகளை ஈர்க்க வழிவகை செய்யும்" என கூறியுள்ளார்.

இதையும் படிங்க:பிறந்த ஒரு மணி நேரத்தில் வீதியில் வீசப்பட்ட பெண் குழந்தை; வேலூரில் கொடூரம்

ABOUT THE AUTHOR

...view details