குஜராத்தின் அகமதாபாத் பகுதியில் எக்கோஸ் கஃபே எனும் உணவகம் இயங்கி வருகிறது. இந்தக் கஃபே பெயரை உபயோகித்து பல்வேறு நாடுகளில் பல உரிமையாளர்கள் உணவகம் நடத்தி வருகின்றனறர்.
இந்நிலையில், எக்கோஸ் கஃபே தங்களது உணவகத்தில் பணிபுரிய காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத 40 நபர்களை பல்வேறு பணிகளுக்கு நியமனம் செய்துள்ளனர்.
இவர்களுக்கு 45 நாட்களுக்கு பிரத்யேகப் பயிற்சி அளிக்கப்பட்டு, இந்தியாவில் உள்ள எக்கோஸ் கஃபேயின் கிளைகளில் பணியாற்ற உள்ளனர். இவர்கள் சைகை மொழியை பெரிதும் நம்பியிருப்பதால், அதற்கேற்ப பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அடிப்படை நுட்பங்களையும் புரிந்துகொள்ளும் வகையில் தயார் செய்கின்றனர்.
இதையும் படிங்க:சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள சிசிடிவி காட்சியை நாங்கள் வெளியிடவில்லை - பின்வாங்கும் ஜாமியா மிலியா பல்கலைக்கழகம்!