மேற்குவங்கத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. இதற்கிடையே, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சென்ற வாகனம் தாக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவிவருகிறது. இந்நிலையில், மாநிலத்தில் நிலவும் சூழல் குறித்து கண்காணிக்க மூன்று நாள் பயணமாக தேர்தல் ஆணையத்தின் குழு நாளை (டிசம்பர் 17) மேற்குவங்கத்திற்கு செல்லவுள்ளது.
மூத்த அரசு அலுலர்களிடம் ஆலோசனை
மேற்குவங்கத்திற்கு செல்லும் குழுவில் துணை தேர்தல் ஆணையர் சுதீப் ஜெயின், மற்ற மூத்த அலுவலர்கள் ஆகியோர் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 17ஆம் தேதி, மாநிலத்தில் நிலவும் சூழல் குறித்து மேற்குவங்கத்தின் மூத்த அலுவலர்களிடம் அக்குழு ஆலோசனை நடத்தவுள்ளது. மத்திய கொல்கத்தாவின் மாவட்ட மாஜிஸ்திரேட், காவல் கண்காணிப்பாளர், காவல் ஆணையர் ஆகியோரையும் அக்குழு சந்திக்கவுள்ளது.