பிகாரில் 243 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது, தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 29ஆம் தேதி முடிவடைய உள்ளது.
இதையடுத்து, அக்டோபர் 28, மற்றும் நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் பிகார் சட்டமன்றத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் என்றும், நவம்பர் 10 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது.
7 கோடியே 29 லட்சத்து 27 ஆயிரத்து 396 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ள பிகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அம்மாநில அதன் பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னர் ஒரு சுதந்திரமான, நியாயமான, பாதுகாப்பான தேர்தலை நடத்துவதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது எனவும் கூறியுள்ளது. தேர்தலை இலகுவாக்க அதிகளவு இயந்திரங்களை பயன்படுத்தப்படவுள்ளதாகக் கூறியுள்ளது. மேலும், பதிவுசெய்யப்படாத குடிமக்களின் அதிகபட்ச பதிவை உறுதி செய்வதற்காக, தேர்தல் வாக்காளர்களின் பட்டியல்களின் சிறப்பு சுருக்கத் திருத்தத்தையும் செய்துள்ளது.
தேர்தல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் மண்டபம் / அறையின் நுழைவு வாயிலில், அனைத்து நபர்களின் உடல் வெப்ப நிலையைக் கண்டறிய உதவும் கருவி பொருத்தப்படவேண்டும். கிருமி நாசினிகளை மக்கள் பயன்படுத்தும் அனைத்து இடங்களிலும் வைக்கவேண்டும். தகுந்த இடைவெளிகள் முறையாகப் பராமரிக்கவும், நடைமுறைப்படுத்தவும் உதவும் வகையில் பெரிய அரங்குகளைப் பயன்படுத்தப்பட வேண்டும்.
வேட்புமனு சமர்ப்பிக்க ஒரு வேட்பாளருடன் ஐந்து நபர்கள் வந்த நிலையில் தற்போது இரண்டு நபர்கள் மட்டுமே வரவேண்டும். வேட்பாளர்கள் மூன்று கார்களுக்கு பதிலாக இரண்டு கார்களை பயன்படுத்த மட்டுமே அனுமதிக்கப்படும்.