இந்தியாவின் 17ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி முடிவடைகிறது. மொத்தம் உள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குமான தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் வேலைகளில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
பரப்புரையில் வார்த்தை கவனம் தேவை யோகி: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை! - 17-ஆவது மக்களவைத் தேர்தல்
லக்னோ: தேர்தல் பரப்புரையில் கவனமாக பேச வேண்டும் என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

EC issues censure to Adityanath over 'Modi ki Sena' remark
இதில் ஏப்ரல் 1ஆம் தேதி உத்தரப்பிரதேசம் காசியாபாத்தில் பரப்புரையில் ஈடுபட்ட அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இந்திய ராணுவம், பிரதமர் மோடியின் சேனை என்று கூறியதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனையடுத்து, தற்போது உத்தரப்பிரதேசம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில், தேர்தல் பரப்புரையில் கவனமாக பேச வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.