தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தொலைதூரத்திலிருந்து வாக்களிக்கும் தொழில்நுட்பம்- சென்னை ஐடிடியுடன் கை கோர்க்கிறது தேர்தல் ஆணையம் - Election Commission Remote voting Technology

டெல்லி : தொலைதூரத்திலிருந்து வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக, சென்னை ஐஐடி கல்லூரியுடன் சேர்ந்து புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது.

voting ITT Madras EC
voting ITT Madras EC

By

Published : Feb 17, 2020, 4:37 PM IST

வெளியூர்களில் தங்கி வேலை செய்யும் வாக்காளர்கள், தேர்தல் நேரத்தில் விடுமுறை கிடைக்காமலோ, போதிய பணமில்லாமலோ சொந்த ஊருக்கு திரும்ப முடியால் வாக்களிக்க தவறுவதுண்டு.

இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில், சொந்த ஊருக்கு வராமல் வாக்காளர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே வாக்களிக்க வசதியாகப் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க சென்னை ஐஐடி கல்லூரியுடன் தேர்தல் ஆணையம் கைக்கோர்த்துள்ளது.

இதுகுறித்து மூத்த துணை தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சோ கூறுகையில, "பிளாக்-செயின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பிரத்யேகமான இண்டர்நெட் சேவை வசதியுடன், பையோ மெட்ரிக் கருவிகள்; வெப்-கேமராவுடன் கூடிய மின்னணு வாக்குப்பதிவு அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் யோசனை.

ஆனால், வாக்காளர்கள் குறிப்பிட்ட ஒரு இடத்துக்கு வந்தே வாக்களிக்க வேண்டியிருக்கும். வீட்டிலிருந்து வாக்களிக்க முடியாது" என்றார்.

இந்தத் திட்டம் இன்னும் ஆராய்ச்சி நிலையில் உள்ளதாகத் தெரிவித்த மற்றொரு தேர்தல் அலுவலர், முதலில் மூலப்படிமம் (புரோடோடைப்) ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.

இதையும் படிங்க : வண்ணாரப்பேட்டையில் தடியடி நடத்தியது ஏன்? பேரவையில் முதலமைச்சர் விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details