தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 16, 2020, 8:42 PM IST

ETV Bharat / bharat

முடிவை திரும்பப்பெற்ற தேர்தல் ஆணையம்: 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்க முடியாது!

டெல்லி: 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், நடைமுறை சிக்கல்கள் காரணம் காட்டப்பட்டு அந்த முடிவு திரும்பப்பெறப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

கரோனா வைரஸ் நோயின் தாக்கம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் அதன் கோர தாண்டவத்தில் சிக்கி தவித்து வருகின்றன. இதனிடையே, பிகார் சட்டப் பேரவை தேர்தல், அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. பெருந்தொற்று காரணத்தால் 65 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தபால் மூலம் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

ஆனால், தற்போது நடைமுறை சிக்கலைக் காரணம் காட்டி, அந்த முடிவு திரும்பப்பெறப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இருப்பினும், மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர், தனிமைப்படுத்தப்பட்ட கரோனா நோயாளிகள் ஆகியோர் தபால் மூலம் தேர்தல்களில் வாக்களிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், "மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான வயது வரம்பு 65ஆக குறைக்கப்பட்டது. ஆனால், தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர், தனிமைப்படுத்தப்பட்ட கரோனா நோயாளிகள் ஆகியோர் மட்டுமே சட்டப்பேரவை, இடைத்தேர்தல்களில் தபால் மூலம் வாக்களிக்கலாம்.

மேலாண்மை, பாதுகாப்பு, ஆட்கள் பற்றாக்குறை காரணமாக இந்த முடிவு திரும்பப்பெறப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் புதிய உறுப்பினர்களை ஒரு மாதத்திற்குள் நியமிக்க உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details