தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி எம்பியும், அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகளுமான கவிதாவுக்கு எதிராக 178 விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
தெலுங்கானா முதலமைச்சர் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின் போது, மஞ்சளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்து தருவேன் என வாக்குறுதி அளித்துள்ளார். அதனை வழங்காததால் அதிருப்தி அடைத்த விவசாயிகள் அவர் மகள் கவிதா போட்டியிடும் தொகுதியில் தங்கள் எதிர்ப்பை காட்டும் விதமாக மனுதாக்கல் செய்துள்ளனர்.
இதனையடுத்து மொத்தம் 185 பேர் போட்டியிடும் நிசாமாபாத் நாடாளுமன்றத் தொகுதியில், வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.