கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் ஏப்ரல் 9ஆம் தேதி பரப்புரை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, "புதிய வாக்காளர்கள் அனைவரும் தங்களது வாக்கினை பாகிஸ்தானின் பாலகோட்டில் தாக்குதல் நடத்திய விமானப்படை வீரர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும்" என தெரிவித்திருந்தார். இது குறித்து காங்கிரஸ், தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது.
மோடி மீதான மேலும் இரண்டு புகாரில் முகாந்திரம் இல்லை - தேர்தல் ஆணையம் - PM Modi
டெல்லி: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிரதமர் நரேந்திர மோடி மீது அளிக்கப்பட்ட மேலும் இரண்டு புகாரில் முகாந்திரம் இல்லை என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
மேலும், ஏப்ரல் 23ஆம் தேதி குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் வாக்களித்த பின் பிரதமர் மோடி பேரணி மேற்கொண்டார். இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என, காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. இந்நிலையில், இந்த இரண்டு புகார்களை விசாரித்த தேர்தல் ஆணையம், இரு புகார்களிலும் முகாந்திரம் இல்லை எனக் கூறியது.
தேர்தல் நடத்தை விதிகளை மீறி பரப்புரை மேற்கொண்டதாக, பிரதமர் நரேந்திர மோடி மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் தேர்தல் ஆணையத்தில் 11 புகார்கள் அளிக்கப்பட்டன. இதில், ஆறு புகார்களில் முகாந்திரம் இல்லை என தேர்தல் ஆணையம் முன்னதாக, தெரிவித்து. இத்துடன் சேர்த்து பிரதமர் மோடி மீதான எட்டு புகார்களில் தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.