சமாஜ்வாதி கட்சியிலிருந்து விலகிய நீரஜ் சேகர் பாஜகவில் இணைந்ததால் அத்தொகுதிக்கான மாநிலங்களவை உறுப்பினர் பதவி தற்போது காலியாக உள்ளது. மேலும், ராஜஸ்தான் மாநிலங்களவை உறுப்பினர் மதன்லால் சைனி கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். எனவே, மாநிலங்களவையில் ராஜஸ்தான், உத்தரப் பிரதேச உறுப்பினர்களுக்கான இரண்டு பதவிகள் காலியாகவே இருந்துவருகின்றன.
மாநிலங்களவையில் மீண்டும் மன்மோகன் சிங்...! - Rajya Sabha seats
டெல்லி: மாநிலங்களவையில் காலியாக உள்ள ராஜஸ்தான், உத்தரப் பிரதேச உறுப்பினர்களுக்கான தேர்தல் ஆகஸ்ட் 26ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மன்மோகன்சிங்
இந்நிலையில், மாநிலங்களவையில் காலியாக உள்ள இந்த இரண்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 26ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தானிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குமுன் ஐந்து முறை ராஜஸ்தானிலிருந்து மாநிலங்களவைக்கு மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.