சட்டப்பேரவைத் தேர்தல்
மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு வருகிற 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதுமட்டுமின்றி 17 மாநிலங்களில் காலியாகவுள்ள 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது.
இதையும் படிங்க: விக்கிரவாண்டி அருகே ரூ.17.80 லட்சம் பணம் பறிமுதல்!
இதையடுத்து அன்றைய தினம் காலை 7 மணி முதல் மாலை 6.30 வரை (அதாவது வாக்குப்பதிவு நிறைவடையும் வரை) எவ்வித கருத்துக் கணிப்புகளும் வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.
21ஆம் தேதி வாக்குப்பதிவு
இந்தத் தகவலை தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஷேய்பாலி சாரன் தெரிவித்தார். மகாராஷ்டிரா (288 தொகுதிகள்), ஹரியானா (90 தொகுதிகள்) தேர்தல் முடிவுகள் 24ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி, நாங்குநேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரி காமராஜ் நகர் சட்டப்பேரவைக்கும் அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உள்ளன.
இரண்டு மக்களவைத் தொகுதி
வருகிற 21ஆம் தேதி, மகாராஷ்டிராவில் சத்ரா, சமஸ்திப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புதுச்சேரி இடைத்தேர்தல் - காங்கிரஸ் vs என்ஆர் காங்கிரஸ் நேருக்கு நேர் மோதல்!