தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

261 ரயில் பெட்டிகள் கோவிட்-19க்கு சிகிச்சை அளிக்க ரெடி! - COVID-19 isolation coaches

கிழக்கு கடற்கரை ரயில்வேத் துறை தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள 261 படுக்கை வசதிகொண்ட ரயில் பெட்டிகளை கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தும் அறையாக மாற்றியுள்ளது.

East Coast Railway
East Coast Railway

By

Published : Apr 19, 2020, 5:57 PM IST

புபனேஸ்வர்: 261 படுக்கை வசதிகொண்ட ரயில் பெட்டிகளை கோவிட்-19 நோய் தாக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே துறை மொத்தமாக 5000 ரயில் பெட்டிகளை கோவிட்-19 சிகிச்சைக்காக பயன்படுத்த அறிவுறுத்தியிருந்தது. அதன்படி ஒடிஸா மாநிலம் மஞ்சேஷ்வரிலுள்ள ரயில் பட்டறையில் 51 பெட்டிகளும், பூரியில் 39 பெட்டிகளும், புபனேஷ்வரில் 46 பெட்டிகளும் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல சம்பல்பூரில் 32 பெட்டிகளும், விசாகப்பட்டினத்தில் 60, குர்தாவில் 33 பெட்டிகளும் கரோனா சிறப்பு மருத்துவ அறைகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இந்த ரயில் பெட்டிகளில் மருத்துவர்களுக்கும், நோயாளிகளுக்கும் தேவையான அனைத்து விதமான வசதிகளும், மருத்துவ உபகரணங்களும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details