பாகிஸ்தானின் வடமேற்கு லாகூரில் நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டர் அளவில் 6.3ஆக பதிவாகியுள்ளது. இதனால், டெல்லி மற்றும் அதன் சுற்றவட்டார பகுதிகளில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது. காஷ்மீர், பஞ்சாப், உத்தரகாண்ட் உள்ளிட்ட வட இந்தியாவின் பல பகுதிகளில் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டது.
டெல்லியில் நிலஅதிர்வு! - டெல்லி நிலநடுக்கம்
டெல்லி: டெல்லியில் மற்றும் என்.சி.ஆர் பகுதிகளில் நிலஅதிர்வு ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Earthquake
இந்த நிலஅதிர்வால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒரு கட்டடம் இடிந்து விழுந்தது. இதனைத் தொடர்ந்து 50 பேர் மீர்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், உயிரிழப்பு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்ற தகவல் வெளிவரவில்லை. இதனால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.