பாகிஸ்தான் தென்மேற்கு நகரமான குவெட்டா, அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இன்று (நவ. 14) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 5.2 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - பாகிஸ்தான் குவெட்டா
பாகிஸ்தான் தென்மேற்குப் பகுதிகளில் இன்று (நவ. 14) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
Earthquake in Quetta
பிஷின், ஹர்னாய், பலுசிஸ்தான் உள்ளிட்ட நகரங்களில், இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால், பீதியடைந்த மக்கள், வீடுகளை விட்டு, அலறி அடித்தபடி, வெளியேறினர். அதேநேரம், தற்போதுவரை இந்த நிலநடுக்கத்தால், எந்தவிதமான சேதமும், பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
Last Updated : Nov 14, 2020, 3:06 PM IST