வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில், இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து நிலநடுக்கவியல் தேசிய மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று காலை 11.16 மணியளவில் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்கமானது மிசோரம் மாநிலம் சம்பாய் தென்கிழக்கில் 29 கிமீ தொலைவில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, அசாம் மாநிலத்தில் கர்பி அங்லாங் அருகில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், நேற்றும் அசாமில் 3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது" எனக் குறிப்பிட்டிருந்தனர்.
மிசோரம், அசாமில் மிதமான நிலநடுக்கம்! - Richter scale
டெல்லி: மிசோரத்தில் 3.8 ரிக்டர் அளவிலும், அசாமில் 3 ரிக்டர் அளவிலும் மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

பூகம்பம்
அசாமில் ஜூன் 18 முதல் ஜூன் 24ஆம் தேதிக்குள் சம்பாய், சைட்டுவல், செர்ச்சிப் ஆகிய மாவட்டங்களில் பல முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.