இந்தியாவின் வடபகுதியில் அமைந்துள்ள உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி மாவட்டத்தில் இன்று அதிகாலை திடீரென மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டடங்கள் குலுங்கி, வீடுகள் சேதமடைந்தன. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களுக்கு சென்று தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.9 என பதிவானது.
உத்தரகண்ட், நிகோபர் தீவுகளில் மிதமான நிலநடுக்கம் - தேஹ்ராதுன்
புதுடெல்லி: உத்திரகண்ட், நிகோபர் தீவுகளில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டத்தால் மக்கள் பீதி அடைந்தனர்.
![உத்தரகண்ட், நிகோபர் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3313458-thumbnail-3x2-kig.jpg)
earthquake
இதேபோல் நிகோபர் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 என பதிவானது.
முன்னதாக, நேபாள தலைநகர் காத்மாண்டூவிலும் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7 என பதிவானது. மிதமான நிலநிடுக்கம் என்பதால் அங்கு எந்த வித உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை.