தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹைதராபாத்தில் இ - ஆட்டோ சேவை அறிமுகம்!

ஹைதராபாத்: கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கும் விதமாக இ - யானா 'e-yAna' என்ற மின்சாரத்தில் இயங்கும் வாடகை ஆட்டோ சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

e-yAna' taxi
e-yAna' taxi

By

Published : Dec 12, 2019, 4:16 PM IST

புவி வெப்பமயமாதலுக்கு எதிராகவும் அதிகரித்துவரும் காற்று மாசுக்கு எதிராகவும் போராடும் வகையில் 'இ - யானா' (e-yAna) என்ற மின்சாரத்தில் இயங்கும் வாடகை ஆட்டோ, வாடகை இரு சக்கர வாகன சேவை ஹைதராபாத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து இ - யானா நிர்வாக இயக்குநர் கூறுகையில், "இந்த இ - போக்குவரத்துத் துறையில் நுழைவதற்கு முன், கடந்த பத்து ஆண்டுகளாக சோலர் துறையில் இருந்தோம். இந்த இ - போக்குவரத்துத் துறை குறித்து நீண்ட ஆய்வை நடத்தியுள்ளோம். எங்களிடம் இ - ஆட்டோ, இ - இருசக்கர வாகனங்கள் என இருவகையிலான வாகனங்கள் வாடகைக்கு உள்ளது.

இதுபோன்ற சேவைகளை மக்கள் செயலிகள் மூலமே பயன்படுத்த விரும்புகின்றனர். எனவே, நாங்கள் இதற்கென பிரத்யேக செயலியை உருவாக்கியுள்ளோம். எங்கள் வாகனங்களுக்கு தனிச் சிறப்பு உள்ளது. அதாவது எங்கள் இ - வாகனங்கள் அனைத்துமே சோலார் மூலமே சார்ஜ் செய்யப்படும்.

ஒவ்வொரு பயணம் முடிந்தவுடனும், அப்பயணத்தில் எவ்வளவு கரியமில வாயு வெளியேற்றம் தடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல்களும் பயனாளிகளுக்கு அனுப்பப்படும். சந்தை நிலவரத்தைப் பொறுத்து, ஒரு பயணத்துக்கோ அல்லது ஒரு கிலோ மீட்டருக்கோ கட்டணம் வசூலிக்கப்படும்" என்றார்.

இ - யானாவின் இந்த முயற்சிக்கு அப்பகுதி மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இது குறித்து ஹைதராபாத் வாசியான மஹோந்தர் கூறுகையில், "ஒவ்வொரு மாநிலத்திலும் மாதத்துக்கு இரண்டு லட்சம் வாகனங்கள் புதிதாக சாலைக்கு வருகின்றன. இதன்மூலம் ஏற்படும் காற்று மாசு மிகப்பெரியது. எனவே, இந்த மாற்று முயற்சியை மக்கள் ஆதரிக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: ஜூலிமா - குழந்தை திருமணங்களுக்கு எதிராக ஒலிக்கும் பெயர்!

ABOUT THE AUTHOR

...view details