தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முற்றிலும் இணையவழி அலுவலகமாக மாறிய குண்டூர் ரயில் நிலையம்!

அமராவதி: இந்திய ரயில்வேத் துறையில் குண்டூர் ரயில் நிலையம் முதன் முதலாக இணையவழி அலுவலகமாக மாறியுள்ளதாக அதன் மண்டல அலுவலர் பூமா தெரிவித்துள்ளார்.

குண்டூர்

By

Published : Apr 20, 2019, 4:51 PM IST

இந்தியன் ரயில்வே துறை சார்பாக 64ஆவது ரயில்வே வார விழா குண்டூரில் கொண்டாடப்பட்டது. அவ்விழாவில் பேசிய குண்டூர் ரயில்வே மண்டல அலுவலர் வி.ஜி.பூமா பேசுகையில், 'குண்டூர் ரயில்வே நிலையம் நாட்டிலேயே முதன் முறையாக முற்றிலும் இணையவழி அலுவலமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மண்டலத்தில் பணிபுரியும் 4,000 அலுவலர்களும் இதனைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

மேலும், இது ரயில்கள் தாமதமாக வருவதை தவிர்ப்பதற்காக மட்டுமல்லாமல், வெளிப்படைத்தன்மையை செயல்படுத்துவதற்காகவும் செயல்படுத்தப்பட்டுள்ளது' எனப் பேசினார்.

ABOUT THE AUTHOR

...view details