குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடியை நெதர்லாந்து நாட்டு மன்னரும், ராணியும் சந்தித்தனர்.நெதர்லாந்து நாட்டின் அரசரான வில்லியம் அலெக்சாண்டர், ராணி குயின் மாக்ஸிமா ஐந்து நாள் சுற்றுப்பயணமாக நேற்று இந்தியா வந்தனர். புது டெல்லியில் உள்ள விமான நிலையத்தில் அரச தம்பதி இருவருக்கும் சிறப்பான பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டு பதவி ஏற்புக்குப் பிறகு வில்லியம் அலெக்சாண்டர் இந்தியா வருவது இது முதல் முறையாகும்.
இன்று காலை ராஜ்கோட் சென்ற தம்பதியினர் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து ராஷ்ரபதி பவனில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை அரச தம்பதியினர் சந்தித்தனர். மேலும் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் நெதர்லாந்து மன்னரைச் சந்தித்துப் பேசினார்.