தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மேற்கு வங்க துர்கா பூஜை விழா: பாஜகவின் தேர்தல் வியூகமா? - durga-puja-pm-modi-to-address-people-of-west-bengal-today

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் பாஜக சார்பாக நடத்தப்படும் துர்கா பூஜை விழாவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துகொள்ளவுள்ள மோடி, மாநில மக்களிடையே உரையாற்றவுள்ளார்.

மோடி
மோடி

By

Published : Oct 22, 2020, 11:40 AM IST

மேற்கு வங்கத்தில் அடுத்தாண்டு மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பலம் வாய்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த பாஜக பல முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, மக்களிடையே பாஜகவை பிரபலமடையவைக்கும் வகையில் புகழ்பெற்ற துர்கா பூஜை விழாவை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், பாஜக சார்பாக நடத்தப்படும் துர்கா பூஜை விழாவை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கிவைத்து மாநில மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். மேற்குவங்கத்தில் உள்ள 294 தொகுதிகளிலும் மோடியின் உரையை ஒளிபரப்ப அக்கட்சி அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

நேற்று, இதுகுறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "மேற்குவங்க சகோதர, சகோதரிகளே. நாளை நடைபெறவுள்ள துர்கா பூஜை விழாவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துகொண்டு உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவிக்க போகிறேன். என்னுடன் சேர்ந்து விழாவை சிறப்பிக்கவும். தீமைக்கு எதிரான போரில் நன்மை வெற்றிபெறுவதே துர்கா பூஜை எனும் புனிதமான விழா. நல்ல உடல்நிலை, மகிழ்ச்சி வலிமை ஆகியவற்றை நமக்கு அளிக்க துர்கை தேவியை வேண்டுவோம்" என பதிவிட்டுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், 18 தொகுதிகளில் பாஜகவும் 22 தொகுதிகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் மின்னல் தாக்கி 25 பேர் காயம்

ABOUT THE AUTHOR

...view details