திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை மே 13ஆம் தேதியன்று தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் சந்தித்த நிலையில், தற்போது திமுக பொருளாளர் துரைமுருகன் தனது குடும்பத்தினருடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
துரைமுருகன் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு! - Duraimurugan
அமராவதி: ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை திமுக பொருளாளர் துரைமுருகன் அம்மாநில தலைநகர் அமராவதியில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
துரைமுருகன்
தேர்தல் முடிவுகள் இன்னும் சற்று நாட்களில் வர உள்ள நிலையில் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாயந்ததாக கருதப்படுகிறது. தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மூன்றாவது அணி அமைப்பது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினை நேற்று சந்தித்து பேசியிருந்தார். இதைப் பற்றி சந்திரபாபு நாயுடுவிடம் துரைமுருகன் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Last Updated : May 15, 2019, 7:27 AM IST