கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு நாடு முழுவதும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இச்சூழ்நிலையில், மக்களின் நலனை கருத்தில்கொண்டு உணவுகளை வழங்கும் ஆன்லைன் ஃபுட் டெலிவரி நிறுவனத்திற்கு மட்டும் ஊரடங்கில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டெலிவரி பாய்ஸ் வழக்கம்போல் உணவுகளை மக்களுக்கு விநியோகித்து வருகின்றனர்.
ஆனால், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், கடத்தல்காரர்களின் ராஜ்யம் இருந்துதான் வருகிறது. அதற்கு அவர்கள் கையில் எடுத்துள்ள புதிய ஐடியாதான் ஃபுட் டெலிவரி பாய்ஸ்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் , அசார் கான் ஆகிய இருவரும் பிரபல ஃபுட் டெலிவரி டுன்சோ (Dunzo) நிறுவனத்தில் டெலிவரி பாய்ஸாக பணிபுரிந்து வருகின்றனர்.