தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சத்தியா, இந்திரா, மாரிமுத்து மற்றும் திவ்யா. இந்த நான்கு பெண்களும் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் இந்த நான்கு பேரும் கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள தேவாலயம் ஒன்றில் நடைபறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தில் சுமார் 50,000 மதிப்புள்ள நகைகளை அவர்கள் திருடிவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த திருடர்கள் கர்நாடகாவில் கைது!
கர்நாடகா: மங்களூரில் உள்ள தேவாலயம் ஒன்றில் நகை திருட்டில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2008-ம் ஆண்டு இவர்கள் ஈடுபட்ட ஒரு திருட்டு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் சுமார் 10 ஆண்டுகளாக நீதி மன்றத்திற்கு வராமல் இவர்கள் தப்பி வந்துள்ளனர். இதையடுத்து இந்த நான்கு பேரையும் மங்களூர் காவல்துறை தீவிரமாக தேடி வந்த நிலையில், பெங்களூர்க்கு தப்பிச் சென்ற அவர்களை அந்த பகுதி காவல் அதிகாரிகள் கைது செய்தனர். இதை தொடர்ந்து அவர்கள் நான்கு பேர் மீதும், பெங்களூர் காவல் நிலையத்திலும், மங்களூர் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.