தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா: கடலூரிலிருந்து புதுவைக்கு மாற்றப்பட்ட திருமணம்

144 தடை உத்தரவால் கடலூரில் நடைபெறவிருந்த திருமணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், புதுச்சேரியில் உள்ள கோயில் ஒன்றில் முகக்கவசம் அணிந்து எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

due to curfew a marriage was held in puduvai
due to curfew a marriage was held in puduvai

By

Published : Mar 27, 2020, 12:47 PM IST

புதுச்சேரியைச் சேர்ந்த கணேஷ், ரஞ்சனி ஆகியோருக்கு கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் கோயிலில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக திருமணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதன் காரணமாக, புதுச்சேரியில் உள்ள கோயில் ஒன்றில், எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. திருமண விழாவிற்கு வருகை தந்தவர்களுக்கு முகக்கவசம் கொடுத்தும், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

திருமண விழாவில் அதிக மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டதால், மணமக்கள் வீடுகளைச் சேர்ந்த 20 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

கடலூரிலிருந்து புதுவைக்கு மாற்றப்பட்ட திருமணம்

மேலும், திருமண விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு குடிநீர், திருமண விருந்து, தேநீர், தாம்புலம் போன்ற எதுவும் வழங்கப்படாமல் எளிமையான முறையில் நடைபெற்றது.

இதையும் படிங்க: 'திருமணம் நடைபெற்றிருந்தால் தவறான முன்னுதாரணமாகியிருப்போம்'

ABOUT THE AUTHOR

...view details