ராஜஸ்தானில் ஜெய்புரியா மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ரவீந்திர சிங், மதுபான கடை திறக்கப்பட்டதால், மது அருந்தி போதையின் உச்சத்திற்கு சென்றுள்ளார். அவர் குடிபோதையில் மருத்துவமனையிலிருந்த தண்ணீர் தொட்டி மீது ஏறி நிற்பதை, பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர் முகேஷ் மீனா பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக உடனடியாக உயர் அலுவலர்களுக்கு மீனா தகவல் அளித்தார்.
'குடிபோதையில் மருத்துவர்...' - மது பாட்டிலுடன் நீர்த்தொட்டி மேல் ஏறி நின்றதால் அதிர்ச்சி! - அண்மை தேசியச் செய்திகள்
ஜெய்ப்பூர்: குடிபோதையில் மருத்துவமனையில் உள்ள தண்ணீர்த் தொட்டி மீது, ஏறி சுற்றித் திரிந்த மருத்துவரால் பரபரப்பு ஏற்பட்டது.
ds
தகவலின் பேரில் மருத்துவமனைக்கு விரைந்த உயர் அலுவலர்கள், மருத்துவரை இறங்கிவருமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில், மருத்துவர் சமாதானமாகி கீழே இறங்கினார். இதையடுத்து, உடனடியாக மருத்துவரை காவலர்கள் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க:கூடலூர் அருகே 125 கிலோ தங்கத் தூள் பறிமுதல் - பெண் உள்பட 2 பேர் கைது!