குஜராத் மாநிலத்தின் சூரத் மாநகராட்சிக்குட்பட்ட சாகரம்புரா பகுதியின் கவுன்சிலராக உள்ளவர் சிவசக்திவாலா. பாஜகவைச் சேர்ந்த இவர், வல்சத் மாவட்டத்திலுள்ள ஒரு பண்ணை வீட்டில் குடிபோதையில் நடனம் ஆடுவது போன்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குஜராத்தில் மது அருந்துவது, மதுபாட்டில்களை வைத்திருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய சூரத் மாவட்டத்தின் பாஜக செயலாளர் பாஜிவாலா, சிவசக்திவாலா வீடியோ குறித்து விளக்கமளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மக்களுக்காக வேலை பார்க்கும் ஒருவரிடமிருந்து இது போன்ற செயல்கள் வெளிப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. அதுவும் மதுவிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள குஜராத்தில் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய சிவசக்திவாலா, "நான் அந்த வீடியோவில் காட்டப்பட்டிருக்கும் பாட்டிலில் இருப்பது மதுபானம் அல்ல.
அது பழச்சாறுதான். மருத்துவ காரணங்களுக்காக மது அருந்துவதற்கு நான் உரிமம் பெற்றிருக்கிறேன். அந்த பார்ட்டியில் நான் மதுவருந்தி விட்டு நடனமாடவில்லை. இதுகுறித்து எனது கட்சிக்கு விளக்கமளிக்கவுள்ளேன்" என்றார்.
இதையும் படிங்க: விஷத்தைப் பரப்பாதீர்கள், பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் - ஓவைஸியைத் தாக்கும் கிரிராஜ் சிங்