கேரள மாநிலம் கோழிகோடு சர்வதேச விமான நிலையத்தில், கத்தர் நாட்டின் தலைநகரான தோஹாவிற்கு விமானம் மூலம் போதைப்பொருள் கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள சர்வதேச விமான நிலையத்தில் ரூ.2.5 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்! - Kozhikode International Airport
திருவனந்தபுரம்: கோழிகோடு சர்வதேச விமான நிலையத்தில் ரூ.2.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்த முயன்ற நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
![கேரள சர்வதேச விமான நிலையத்தில் ரூ.2.5 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4322816-thumbnail-3x2-drug.jpg)
விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் (Central Industrial Security Force) நடத்திய அதிரடி சோதனையில், இளைஞர் ஒருவரிடம் 530 கிராம் போதைப்பொருள் இருந்தது கண்டறிப்பட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கடத்தலில் ஈடுபட்டவர் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜபிர் என்று தெரியவந்துள்ளது, மேலும் அவர் கடத்த முயன்ற போதைப்பொருளின் மதிப்பு 2.5 கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து அவரிடம் கூடுதல் விசாரணை மேற்கொள்ள ஜபிர் கொச்சி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.